கொனீபா மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் தமிழீழம் எதிர் சப்மி

இன்று நடைபெறவிருக்கும்  கொனீபா  மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் தமிழீழம் எதிர் சப்மி

மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெறும் CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024.இறுதியாட்டம்  08.06.2024 இன்று நடைபெறுகிறது ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வே போடோவில் ASPMYRA  மைதானத்தில்நடைபெறவிருக்கின்றது கடந்த 04.06.2024 தொடக்கம்  மகளிர் உலகக்கிண்ணப்போட்டிக்கு தெரிவாகிய அணிகளுக்கிடையில்  நடைபெற்றுவரும் போட்டியில் சப்மி நாட்டு அணியும் தமிழீழ அணியும் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளன.

நாம் ஒரு சிறிய இனம் நாம்  விளையாட்டின் மூலமும் சாதனை புரிவோமாக இருந்தால் எமது இனத்தின் பெருமையை உலகறியச்செய்யலாம்”.

என்ற எங்கள் தமிழீழ தேசியத்தலைவரின்  தீர்க்கதரிசனமான சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் எமது அடுத்த தலைமுறையினர் தயாராகிவிட்டனர். முழு உலகமுமே எம்மை நோக்கி திரும்பி பார்க்கும் தருணத்தை உருவாக்கி  வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுத தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணியின்  வீராங்கனைகள் முழு முனைப்புடன் தமது அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த உணர்வு பூர்வமான தருணத்தை உருவாக்க உழைத்த தகமையும்,உதைபந்தாட்ட மதிநுட்பமும் வாய்ந்த பயிற்சியாளர்உதவிப்  பயிற்சியாளர்கள் உடலியல் மருத்துவர்,ஊடகத்துறையினர் அனைவருக்கும் எமது நன்றி. பெருமையுடனும், கௌரவத்துடனும் எமது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முயலும் எங்கள் அணியின் பின்னால் உலகளாவிய தமிழீழ சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் என அனைவரும் அணி திரண்டு எமது கனவை தமது கடமையாக ஏற்று களமாடும் தேசத்தின் புதல்விகளுக்கு உற்சாகமளிப்போம்

எமது அணியின் சீருடைகளை அணிந்துகொண்டு அனைத்து நாடுகளில் இருந்தும் இறுதி ஆட்டத்தினை நேரலையில் கண்டு கழித்து உங்கள் ஆதரவினை வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகிறோம். எமது சீருடைகள் மற்றும் உங்கள் அன்பளிப்புகளை வழங்க https://tamileelamfa.net/donate/    என்ற எமது இணையதளத்தினை பயன்படுத்தவும்.

தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம்

Similar Posts