ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

CONIFA வின் இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான கலாச்சார தலைநகரமாக Bodø நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இந்நகரமே நிகழ்வில் ஒரு பகுதியாக செயற்படுவதுடன் CONIFA  மகளிர் உலகக்கிண்ணம் 2024 இனை தொகுத்து வழங்கவுள்ளது.

இந்தப்போட்டியானது விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கு மாபெரும் நிகழ்வாகவும்,அமைதி,உள்ளடக்கம்,நிலைத்தன்மை மற்றும் நட்பு போன்ற மதிப்பு மிக்கவைகளால் சூழப்பட்ட சுழலாகவும் இருக்கும்.விளையாட்டுத்துறையில் உள்ள பெண்களை குறைத்து மதிப்பிடுவதுடன் குறிப்பாக உலகில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களாகவே பல ஆண்டுகளாக கணிக்கப்படுகிறார்கள்.

CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024 ஆனது பெண் சமுதாயத்தில் புதிய முன்மாதிரிகளையும் நட்சத்திரங்களையும் உருவாக்குவதற்கும் அமைதி நட்புடன் கூடிய உலகை கொண்டாடுவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாகவும் இருக்கும். இந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது மிகப்பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறோம்

தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணியில் ஐரோப்பாவின் பல நாடுகள், கனடா  உள்ளிட்ட நாடுகளிலும் இருக்கின்ற மிகைத்திறமையான எம் தமிழீழ இளம் தலைமுறை உதைபந்தாட்ட வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கின்றார்கள். தகமையும்,உதைபந்தாட்ட மதிநுட்பமும் வாய்ந்த பயிற்சியாளர்கள் அணியை மெருகேற்றி வழிநடத்துகின்றார்கள்.இவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி நோர்வே ஒஸ்லோவில் பயிற்சிகளை வழங்கி  தற்போது  BODO இல் நடைபெறவிருக்கும் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் பங்குபெறுவதற்கு தயாராகிவிட்டோம்.

பெருமையுடனும், கௌரவத்துடனும் எமது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முயலும் எங்கள் அணியின் பின்னால்உலகளாவிய தமிழீழ சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரையும  அணிதிரளுமாறு  அன்புரிமையுடன் அழைக்கிறோம். இந்த வரலாற்று பயணத்தில்  தங்களையும் இணைந்து கொண்டு எமக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பொருளாதார சுமையில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு அன்புரிமையோடு வேண்டுகிறோம். தங்களது  சிறிய பங்களிப்பு கூட பெரிய  மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம். எனவே எமது இந்த முயற்சிக்கு  தங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்கி ஊக்குவிக்குமாறு உரிமையுடன் வேண்டுகிறோம். உங்கள் பங்களிப்பினை வழங்க எமது இணையத்தளத்தின் அன்பளிப்பு பொத்தானை அழுத்தவும்.

https://tamileelamfa.net/donate/

தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம்

Similar Posts