கொனீபா ஆசியக்கிண்ணம் 2025
தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம் நடத்தும் ஆண்களுக்கான
கொனீபா ஆசியக்கிண்ணம் 2025
சுதந்திர உதைபந்தாட்ட சங்க கூட்டமைப்புடன் (GONIFA)இணைந்து தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனமானது 2025 ஆம் ஆண்டு ஆண்களுக்கான GONIFA ஆசியக்கிண்ணத்தினை நடத்தவிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.இந்தப்போட்டி யூலை 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை லண்டனில் உள்ள Elbridge Xcel Sports Hub இல் நடைபெறும். இவ் உதைபந்தாட்டப்போட்டியானது தமிழீழம்,திபெத் மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் பண்பாடு மற்றும் சமூகம் தொடர்பான கொண்டாட்டமாக ஒன்றிணைகின்றன.
2023 ஆம் ஆண்டு GONIFA ஆசியக்கிண்ணத்தினை வென்றதன்மூலம் நடப்பு வெற்றியாளராக தமிழீழ அணி இப்போட்டியில் நுழைகிறது.இந்த வெற்றியானது ஒரு மைல்கல் சாதனையாகவும்,அணியின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகவும் இனி வரும் காலங்களில் இருக்கும்.கடந்த காலங்களில் தமிழீழம் ஒழுக்கமானதும் துடிப்பானதுமான உதைபந்தாட்ட அணியாக உருவெடுத்து உலகளாவிய தமிழ் சமூகத்தை ஆர்வத்துடனும் பெருமையுடனும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது
நேர அட்டவணை GONIFA ஆண்களுக்கான ஆசியக்கிண்ணம் 2025
யூலை 1 செய்வாய்க்கிழமை
https://conifatv.com/sportitem/685bcbbab137c859cbb1684d
· 16.00 மணிக்கு தொடக்க நிகழ்வு
· 17.30 தமிழீழம் எதிர் திபெத்
யூலை 2 புதன்கிழமை
https://conifatv.com/sportitem/685bcc36aa7527fb3e3ddfe7
· 14.30 கிழக்கு துருக்கிஸ்தான் எதிர் தமிழீழம்
யூலை 3 வியாழக்கிழமை
https://conifatv.com/sportitem/685bccb9b137c859cbb168b3
· 14.30 திபெத் எதிர் கிழக்கு துருக்கிஸ்தான்
யூலை 5 வெள்ளிக்கிழமை
https://conifatv.com/sportitem/685bcd193d8e438b79fdd944
· 17.30 இறுதி ஆட்டம்
போட்டி நடைபெறும் இடம் : Elmbridge Xcel Sports Hub, Waterside Drive, Walton on Thames, KT12 2JP, UK
தமிழீழ உதைபந்தாட்ட அணியின் பெயர் பட்டியல் ஜூன் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அறியத்தரப்படும்.விளையாட்டு வீரர்கள்,ரசிகர்கள்,சர்வதேச சமூகம் ஆகியோருக்கு இப்போட்டியானது மறக்கமுடியாத ஊக்கமளிக்கும் விதமாக அமையும் என்பதுடன் இப்போட்டியினைக்கண்டு களிக்க உங்களை லண்டனுக்கு வரவேற்பதில் நிறைவடைகிறோம்.உங்கள் வருகையினை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்
நன்றி
தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம்